6ஆவது வலவ்வை சுப்பர் குரோஸ் உடவளவயில் | தினகரன்

6ஆவது வலவ்வை சுப்பர் குரோஸ் உடவளவயில்

வலவ சுப்பர்குரோஸ் 2017 போட்டி ஆறாவது தடவையாக வெற்றிகரமாக எதிர்வரும் 17ம் திகதி எம்பிலிபிட்டிய உடவலவ்வை தேசிய வனப் பூங்காவுக்கு அருகில் உள்ள ஓடுபாதையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவப்படை மின்வலு மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் படைப் பிரிவின் ஏற்பாட்டில் இலங்கை மோட்டார் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சங்க ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ள போட்டியில் மோட்டார் வண்டி ஓட்டப் பிரிவு போட்டிகள் 12ம், மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டி பிரிவுகள் நடைபெறவுள்ளன.

 பார்வையாளர்களுக்கான விசேட பாதுகாப்புடன் கூடிய நவீனமயப்படுத்தப்பட்ட மண்டபங்களையும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதன் முதலில் 2011ம் ஆண்டு சுப்பர்குரோஸ் போட்டிகள் செவனகல ஸ்ரீலங்கா மின்வலு மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் ஒருபாதையில் நடத்தப்பட்டதோடு தொடர்ந்து போட்டிகள் நடத்தப்படுகின்றது. அதற்கான சிறந்த பங்களிப்பை இலங்கை இராணுவப்படை மின்வலு மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் படைப் பிரிவு வழங்கி வருகின்றது.

செவனகல ஓடு பாதையை அமைக்க அப்போதைய பிரிவுத் தலைவர் மேஜர் ஜெனரல் வலித் விஜேதுங்கவே காரணமானார். அதன்படி மேஜர் ஜெனரல் ரவி மாயாதுன்னகயின் மேற்பார்வையின் கீழ் ஆரம்ப வேலைகள் லெப்டினன் கர்னல் இந்துனில் சமரகோன் மற்றும் லெப்டினன் கர்ணல் துமிந்த ஜயசிங்கவுடன் ஓடு பாதை நிர்மாண நிபுணர்களான சஞ்ஜீவ த மெல், இந்திக்க குருசிங்க போன்றோரின் ஒத்துழைப்புடன் மிகக் குறுகிய காலத்தில் அமைக்கப்பட்டது.

இந்த ஓடுபாதையில் ஏனைய ஓடுபாதைகள் போலல்லாது பார்வையாளர் போட்டியைத் தொடர்ந்து காண முடியும். இவ் ஓடுபாதை பள்ளமான இடத்தில் அமைந்துள்ளதால் போட்டியை முழுமையாகக் கண்டு ரசிக்க முடியும்.

1700 மீற்றர் தூரமும் 30 மீற்றர் அகலமும் கொண்ட இவ் ஓடு பாதை ஐந்து வளைவுகளைக் கொண்டது. மிக சிறந்த போட்டியாளர்கள் கலந்து கொள்வதால் போட்டி விறுவிறுப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முறை 50,000 அதிகமாக பார்வையாளர்கள் இப்போட்டியைக் காண வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போட்டிகள் அனைத்தும் நேரடியாக ரூபவாஹினி ஐ அலைவரிசை மூலம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இப்போட்டியின் மூலம் கிடைக்கும் ஆதாயம் இலங்கை இராணுவப்படை மின்வலு மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் பிரிவில் கடமையாற்றி நாட்டுக்காக உயிர் நீத்த மற்றும் அங்கவீனமுற்ற வீரர்களின் குடும்ப நலனுக்காக உபயோகப்படுத்தப்படவுள்ளது.

வலவ்வை சுப்பர் குரோஸ் வெற்றிக்கு காரணமாக அமைந்த படையணியில் முன்னாள் தலைவராக மேஜர் ஜெனரல் லலித் வீஜேதுங்க, மேஜர் ஜெனரல் ரவி மாயாதுன்னே, மின் மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் பணிப்பாளர் நாயகம் திஸ்ஸ ஜயசூரிய, மத்திய நிலைய படை நிறைவேற்றுனராக கடமையாற்றும் பிரிகேடியர் துமிந்த சிறிநாக உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்பை நன்றியுடன் நினைவ கூறுகின்றோம். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...