Home » மாத்தளை வெள்ளைக்கல் அருள்மிகு அழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேக பெருவிழா

மாத்தளை வெள்ளைக்கல் அருள்மிகு அழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேக பெருவிழா

by sachintha
October 21, 2023 9:14 am 0 comment

புராதன தொன்மையும் வரலாற்றுச் சிறப்புமிக்க சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாத்தளை வெள்ளக்கல் அருள்மிகு அழகர் பெருமான் திருக்கோவில் புனராவர்த்தன அஸ்தபந்தன பஞ்சகுண்டபக் ஷ திருக்குடமிளக்கு பெருசாந்தி விழாவின் பூர்வாங்க கிரியைகள் எதிர்வரும் 25ம் திகதி புதன்கிழமை (25/10/2023) ஆரம்பமாகும்.

25/10/2023 காலை 8.00க்கு விஸ்பம் சேன கணபதி பூஜை வழிபாடு, புண்ணியாக ஜெபம், பேரித்தாடனம் தேவ பிராமண அனுஞ்ஞை, முகூர்த்த படலம், தன பூஜை , திரவிய சுத்தி, திரவியாகம் , கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கங்கா தீர்த்த சங்கீரனம், சூரியாகிணி சங்கீரணம்ஆகிய புனித கிரியைகள் நடைபெற்று விபூதி பிரசாதம் வழங்கப்படும்.

பிற்பகல் 3 மணிக்கு விநாயகர் வழிபாடு புண்ணியாக ஜெபம் வாஸ்து சாந்தி, கிராம சாந்தி, பிரவேச பலி, விஷ்வஸ்சேன கணபதி பூஜை, துளசி தாமோதர பூஜை, சத்திய நாராயண பூஜை, மூர்த்திகள் பூர்வாங்க கிரியைகள், சமுத்திர ராஜ பூஜை, ரஷ்ஹோமம், கோவாசம் ,நித்திய துவஜ ரோகனம் ,ஹலா ஹர்ஷணம், சனா ஹோமம் ,கட ஸ்தாபனம் களா ஹோமம் ,தீப ஸ்தாபனம், யத்ரஸ்தாபனம், பிரமஸ்தாபனம் ,யாகசாலை பிரவேசம் ,பஞ்சாகினி விபாஜனம் ,விபூதி பிரசாதம் வழங்கல் நடைபெறும்.

26/10/2023 வியாழக்கிழமை எண்ணெய்க் காப்பு நடைபெறும். காலை 8:00 மணிக்கு மகாகணபதி வழிபாடு, புண்ணியாக ஜெபம், தைலா பியாங்கம், யாகசாலை பிரவேஷம் ,யாக பூஜை பஞ்சாங்கனி பூஜை, ஸ்தாலியாகம் ,சுதர்சன சக்கர யோகம், திரவிய ஹோமம், தீபாராதனை ,பிரதட்ஷணம், திருவாய்மொழி பாராயணம் நடைபெறும்.

மாலை 5 மணிக்கு புண்ணியாக ஜெபம், பஞ்சாமிர்த பூஜை, பிரம்மகத்தி பூஜை, பிம்பரஷபத்தனம், கர்ப்ப துவார பூஜை, யாக பூஜை நந்வாயுவன, வர்ண மந்தர கலாபச நியாசம், பஞ்சாகினி பூஜை, நாராயண ஹோமம், பூர்வ சந்தானம், பஞ்சிம சந்தானம், பூர்ணாகுதி, பிரதட்சணம், சதுர் வேதாரணியம், திருமொழி பாராயணம், குருமார் வஸ்திர ஊத்தரியம் வழங்கல் நடைபெறும்.

27/10/2023 வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறும். காலை 5:00 மணிக்கு விஷ்வம்ஸ் சேன கணபதி பூஜை, புண்ணியாக ஜெபம், யாகசாலை பிரவேசம், யாக பூஜை, பஞ்சாங்கனி பூஜை ,விசேட ஹோமம், உபசார ஹோமம், ஜெயாதி ஹோமம், மஹா பூர்ணாகுதி, விசேட தீபாராதனை, பிரதிஷ்டனம், சதுர் வேத கோஷம், திருவாய்மொழி பாராயணம் ,கீத வாத்தியம், சர்வாஞ்சலி, ஆசீர்வாதம், அந்தர்பலி, பகிர் பலி, யாத்ரா தானம், கும்ப உற்சவம் நடைபெறும். சுபமுகூர்த்தத்தில் மங்கள கோஷங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூமாதேவி, சமேதஸ்ரீ அழகர் பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் தச தரிசனம், எஜமான் அபிஷேகம், ஸ்திராகுதி, ரக்க்ஷா விசர்ஜனம் ,மகா அபிஷேகம் நடைபெறும்.

ஆலய பிரதம குரு தமிழ்நாடு கும்பகோணம் பெரியார் மடம் சீர்வளர்சீர் சிவ பொன்முடி முருகானந்த தேசிக சுவாமிகள் தலைமையில் மற்றும் கிரியா ஜோதி பிரம்மஸ்ரீ முத்து பாலச்சந்திர குருக்கள், ஆகம கிரியாரத்தினம் பிரம்மஸ்ரீ குமார நந்தகுமார குருக்கள் ,சிவஸ்ரீ திலகேஸ்வர குருக்கள், சிவஸ்ரீ கணேச திருநீலகண்ட குருக்கள், சிவஸ்ரீ சாமி மகேஸ்வர குருக்கள், சிவஸ்ரீ க. கார்த்திகேய குருக்கள்,சிவஸ்ரீ வே. விபுலானந்த குருக்கள் ,சிவஸ்ரீ தோ மிதுஹா சர்மா, சிவஸ்ரீ ச பிரபு சர்மா, சிவஸ்ரீ பி சுதர்சன சர்மா, சிவஸ்ரீ .கமலதாச சர்மா, சிவஸ்ரீ நிசாந்தன் சர்மா ஆகியோர் இணைந்து புசல்லாவ புவநேந்திர குழுவினர் மங்கல இசை வழங்க கிரிகைகளை நடத்துகின்றனர்.

வெள்ளக்கல் ஆலய கும்பாபிஷேக கிரியைகளில் அடியார்கள் கலந்து கொண்டு பால் பழம், பூமாலை போன்ற பூஜைப் பொருட்களை வழங்கி நாராயண பெருமாளின் திருவருள் கடாட்ஷத்தை பெற்றுக் கொள்ளுமாறு ஆலய அறங்காவால சபை தர்மகர்த்தா மு.சபாபதி ஐயா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆலயத்தினை ஆகம முறைப்படி எல்கடுவ பாலேந்திரன்(கண்ணன்) குழுவினர் மற்றும் உக்குவளை நவரெட்னராஜா குழுவினர்இணைந்து புனருத்தானம் செய்துள்ளனர்.

எச்.எச். விக்ரமசிங்க…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT