தினகரன் ஆதரவாளர்கள் உருவப் பொம்மை எரிப்பு | தினகரன்

தினகரன் ஆதரவாளர்கள் உருவப் பொம்மை எரிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்ட தகவல் வெளியானதை அடுத்து தினகரன் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூரில் ரயில் சந்திப்பு எதிரே போராட்டம் நடத்தப்பட்டது. கார்களில் வந்த சுமார் 35பேர் யாரும் எதிர்பார்க்காத வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவரது உருவ பொம்மைக்கும் தீ வைத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கைது செய்தனர். முன்னதாக நேற்று அதிகாலை மன்னார்குடியில் உள்ள அதிமுக நகர அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டது. கண்காணிப்பு கெமராவை மறைத்து மர்ம நபர்கள் இச்செயலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்த தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து தீயை அணைத்தனர். சம்பவம் தொடர்பாக தினகரன் ஆதரவாளர்களான காமராஜ் மற்றும் ஆனந்த ராஜ் மீது மன்னார்குடி பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


Add new comment

Or log in with...