பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி ஸ்டாலின் மனு! | தினகரன்

பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி ஸ்டாலின் மனு!

எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

செப்.10ல் ஆளுநரை சந்தித்து, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரப்பட்டது. இதற்கு 7 நாட்கள் ஆளுநருக்கு கெடு விதித்த நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

இது குறித்து நேற்று அண்ணா அறிவாலயத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

சட்டமன்றத்தை கூட்டும் அதிகாரம் ஆளுநருக்கு தான் உள்ளது, ஆளுநர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடியுள்ளோம். சட்டமன்றத்தை கூட்டினால் திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும். பெரும்பான்மை இருப்பதாக கூறும் முதல்வர் பழனிசாமி அதனை நிரூபிக்க வேண்டும். அதிமுக பொதுக்குழு தீர்மானத்தில் தலையிட விரும்பவில்லை. திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டி எனக்கூறி டிடிவி தினகரன் விளம்பரம் தேடப்பார்க்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


Add new comment

Or log in with...