இஸ்ரேல் மீது லெபனான் முறைப்பாடு | தினகரன்

இஸ்ரேல் மீது லெபனான் முறைப்பாடு

இஸ்ரேல் போர் விமானங்கள் தனது வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது குறித்து ஐ.நா பாதுகாப்பு சபையிடம் அவசர முறைப்பாட்டை செய்யவிருப்பதாக லெபனான் அறிவித்துள்ளது.

சிரிய அரச தளம் ஒன்றின் மீது இஸ்ரேல் கடந்த வியாழக்கிழமை வான் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு தமது வான் பரப்பை மீறி இருப்பதாக லெபனான் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

லெபனானின் போராட்டக் குழுவான ஹிஸ்புல்லாஹ் அமைப்புக்கு எடுத்துச் செல்லப்படும் ஆயுத தளம் ஒன்றின் மீதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் உளவு அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் இரு படையினர் பலியானதாக சிரிய இராணுவம் குறிப்பிட்டது.

லெபனான் பிரதமர் சாத் ஹரிரி அரசின் கூட்டணியாக ஹிஸ்புல்லாஹ் அமைப்பு உள்ளது. எனினும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் லெபனான் நடுநிலை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இஸ்ரேல் போர் விமானங்கள் கடந்த காலங்களிலும் லெபனான் வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...