ரஷ்ய வான் தாக்குதலில் சிரியாவில் 34 பேர் பலி | தினகரன்

ரஷ்ய வான் தாக்குதலில் சிரியாவில் 34 பேர் பலி

சிரியாவின் மோதல் இடம்பெறும் கிழக்கு மாகாணமான டைர் எஸ்ஸோரில் இருந்து நதி வழியாக தப்பிச் சென்றுகொண்டிருந்த பொது மக்கள் மீது ரஷ்யா கடந்த ஞாயிறன்று நடத்திய வான் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒன்பது சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்று யூப்ரடிஸ் நதியில் இருந்து பல சடலங்களும் மீட்கப்பட்டதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமை கண்காணிப்பு குழு குறிப்பிட்டுள்ளது.

டெயிர் எஸ்ஸோர் நகரின் தென்கிழக்காக நதியின் கிழக்கு துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட 40க்கும் அதிகமான படகுகள் மீதே இந்த வான் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

டைர் எஸ்ஸோரில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுக்கு எதிராக ரஷ்ய வான் தாக்குதல் உதவியோடு சிரிய துருப்புகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நகரில் கடந்த மூன்று ஆண்டுகளாக நீடிக்கும் ஐ.எஸ் முற்றுகையை சிரிய படை கடந்த சனிக்கிழமை முறியடித்தது.

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையும் இங்கு ஐ.எஸ்ஸுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...