ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்றார் நடால் | தினகரன்

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்றார் நடால்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க் நகரில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டு வீரர்கள் நடால் -- அண்டர்சன் இருவரும் மோதினர்.

இதில் ஆரம்பம் முதலே ரபேல் நடால் அதிரடியாக ஆடினார். அவரது ஒவ்வொரு சர்வீசிலும் அனல் பறந்தது.

ரபேல் நடால் முதல் செட்டை 6--3 என்ற கணக்கில் வென்றார். அதை தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் 6 -- 3 என்ற கணக்கில் வென்றார்.

இதையடுத்து, நடைபெற்ற 3-வது சுற்றில் ஆண்டர்சன் ஓரளவு போராடினார். ஆனாலும், ரபேல் நடாலின் நேர்த்தியான ஆட்டத்தால் 6--4 என்ற கணக்கில் மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்றார்.

அத்துடன், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்றார். இது அவரது 16-வது கிராண்ட்ஸ்லம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...