கிறிஸ் கெய்ல் அணியை வீழ்த்தி பிராவோ அணி சம்பியன் | தினகரன்

கிறிஸ் கெய்ல் அணியை வீழ்த்தி பிராவோ அணி சம்பியன்

கரீபியின் பிரிமீயர் லீக் தொடரில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டிரின்பாகுா நைட் ரைடர்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றது.

மேற்கிந்திய தீவு கிரிக்கெட் சபையால் நடத்தப்பட்டு வரும் கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் இந்த வருடத்திற்கான இந்த பருவகாலத்தின் இறுதிப் போட்டி நேற்றுக் காலை நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியும், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

நாணயச்சுழற்சியில் வென்ற நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் வெயின் பிராவோ களத்தடுப்பை தேர்வு செய்தார். அதன்படி பேட்ரியாட்ஸ் அணியின் தலைவர் கிறிஸ் கெய்ல், லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கெய்ல் 1 ஓட்டங்களிலும், லெவிஸ் 16 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். மிகச்சிறந்த அதிரடி மன்னர்களான இருவரும் சொற்ப ஒட்டங்களுக்கு ஆட்டமிழக்க பேட்ரியாட்ஸ் அணி ஓட்டங்கள் குவிக்க திணறியது.

பிராத்வைட் 30 ஒட்டங்களும், மொகமது நபி 18 ஒட்டங்களும், காட்ரெல் 21 ஒட்டங்களும் எடுக்க பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ஒட்டங்கள் எடுத்தது.

பின்னர் 136 ஒட்டங்கள் என்ற எளிதாக இலக்கை நோக்கி நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக சுனில் நரைன், முன்றோ ஆகியோர் களம் இறங்கினார்கள்.

சுனில் நரைன் 3 ஒட்டங்களுக்கு ஆட்ட இழந்தார். அடுத்து வந்த தலைவர் வெயின் பிராவோ முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார். முன்றோ 29 ஒட்டங்கள் சேர்த்தார்.

அதன்பின் வந்த ஹம்சா தரிக் 18 ஒட்டங்களும், டேரன் பிராவோ 1 ஒட்டமும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் 14.2 ஓவரில் 90 ஒட்டங்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்திருந்தது நைட் ரைடர்ஸ்.

8-வது விக்கெட்டுக்கு ராம்தின் உடன் கூப்பர் ஜோடி சேர்ந்தார். அப்போது நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 34 பந்தில் 47 ஒட்டங்கள் தேவைப்பட்டது. இருவரும் விக்கெட் இழக்காமல் விளையாடினார்கள்.

கடைசி 3 ஓவரில் 33 ஒட்டங்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை காட்ரெல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் கூப்பர் சிக்ஸ் அடித்ததால் 11 ஒட்டங்கள் கிடைத்தது.

இதனால் கடைசி 2 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ஹில்பெனாஸ் வீசினார். முதல் இரண்டு பந்தில் இரண்டு வைடு மற்றும் ஓடி எடுத்த ஒட்டங்கள் மூலம் ஐந்து ஒட்டங்கள் கிடைத்தது.

3-வது பந்தை நோபாலாக வீசினார். இந்த பந்தை கூப்பர் சிக்சருக்கு தூக்கினார். நோ-பால் என்பதால் ப்ரீஹிட் கிடைத்தது. அந்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தையும் பவுண்டரிக்கு துரத்தினார்.

கடைசி இரண்டு பந்திலும் தலா ஒரு ஓட்டங்கள் எடுக்க டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 19 ஓவர் முடிவில் 137 ஒட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஹில்பெனாஸ் இந்த ஓவரில் 22 ஒட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.

கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் வெல்லும் 2-வது சம்பியன் பட்டம் இதுவாகும். 


Add new comment

Or log in with...