ரூ 8 கோடி மோசடி வழக்கு; கெஹலியவுக்கு பிணை | தினகரன்

ரூ 8 கோடி மோசடி வழக்கு; கெஹலியவுக்கு பிணை

 

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரசாங்க அச்சக கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ஆகியோரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்துள்ளது.

அரசாங்க ஒழுங்கு விதிகளுக்கு முரணாக, அமைச்சர் தனிப்பட்ட ரீதியில் பயன்படுத்திய  கைபேசிக்கு மாதாந்தம் 30 இலட்சம் ரூபா கூட்டுத்தாபனத்தினூடாக செலுத்தப்பட்டுள்ளது.

இதனால் அரசாங்கத்திற்கு 8 கோடி ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாக லஞ்ச ஊழல் திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

மேற்படி வழக்கு நேற்று (11) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சந்தேக நபர்களை பிணையில் செல்ல நீதவான் லால் ரணசிங்க அனுமதி வழங்கினார்.

அனுமதிக்கப்பட்டிருந்த தொலை பேசி கட்டணத்தை விட மேலதிகமாக, முன்னாள் அமைச்சர் தொதலைபேசியை பயன்படுத்தியுள்ளார்.

இதற்கான மேலதிக தொகையை செலுத்துமாறு அவர் அச்சக கூட்டுத்தாபனத்திற்கு பணித்துள்ளார்.

இது தொடர்பில் லஞ்ச ஊழல் திணைக்களம் 13 வழக்குகளை பதிவு செய்துள்ளது.

அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.(பா) 

 


Add new comment

Or log in with...