தொடர்ச்சியாக 5 ஆவது நாளாக ஆணைக்குழுவில் அர்ஜுன் அலோசியஸ் | தினகரன்

தொடர்ச்சியாக 5 ஆவது நாளாக ஆணைக்குழுவில் அர்ஜுன் அலோசியஸ்

 
பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸ் ஐந்தாவது நாளாகவும் இன்று (11) ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
 
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய முறி வழங்கலின் போது இடம்பெற்ற மோசடி குறித்தான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ள அவர், கடந்த வெள்ளிக்கிழமை, சத்தியக்கடதாசி மூலமான உறுதிமொழியுடன் இன்று (11) ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
விசாரணைகளின் பின்னர் நாளை மறுதினம் (13) புதன்கிழமை மீண்டும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...