பூநகரி விபத்தில் பெண் பலி | தினகரன்

பூநகரி விபத்தில் பெண் பலி

கிளிநொச்சி பூநகரிப்பகுதியில் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், வாகனத்தில் பயணித்த ஏனையோர் சிறுகாயங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரந்தன் பூநகரி வீதியூடாக நேற்று(11) பயணித்த வாகனம் 10ஆம் கட்டை பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதன்போது துவிச்சக்கர வண்டியில் சென்ற நாற்பது வயது பெண்ணெருவர் படுகாயடைந்து பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். சிறு காயங்களுங்குள்ளானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.தலையில் படுகாயமேற்பட்டு உயிரிழந்த பெண், சிவகுமார் ஜெகதாம்பாளென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை பூநகரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். (பரந்தன்குறுப்நிருபர்)

பரந்தன் குறூப்,மானிப்பாய் தினகரன் நிருபர்கள் 


Add new comment

Or log in with...