"மலரும் கிழக்கு" அம்பாறையில் கைத்தொழில் கண்காட்சி | தினகரன்

"மலரும் கிழக்கு" அம்பாறையில் கைத்தொழில் கண்காட்சி

 
கிழக்கு மாகாண கிராமிய தொழிற்துறைத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கைத்தொழில் கண்காட்சியும், விற்பனை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வும் நேற்று (10) கிராமிய தொழிற்துறை திணைக்களத்தின் அம்பாறைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
 
கிழக்கிலங்கையின் கைத்தொழில் துறையின் ஒரு புதிய யுகம் "மலரும் கிழக்கு" -2017 எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் இக்கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாண ஆளுநரின் பாரியார், கிழக்கு மாகாண சபை தவிசாளர் சந்திரதாச கலபெதி, கிழக்கு எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மஞ்சுள பெனாண்டோ, மெத்தானந்த டி சில்வா மற்றும் கிழக்கு மாகாண திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
 
இதன்போது கைத்தொழில் துறையில் திறைமைகளை வெளிப்படுத்தியவர்களும், திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
 
நேற்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்ட இக்கண்காட்சி இன்று (11) மற்றும் நாளை மறுதினம் (12) ஆகிய மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
கிழக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களின் சந்தைவாய்ப்பை அதிகரிப்பதே கைத்தொழில் கண்காட்சியின் பிரதான நோக்கமாகும்.
 
(பாலமுனை விசேட நிருபர் - ஏ.எல். றியாஸ்)
 

Add new comment

Or log in with...