தென் மாகாண சபையில் 20 ஆவது திருத்தம் தோல்வி | தினகரன்

தென் மாகாண சபையில் 20 ஆவது திருத்தம் தோல்வி

 
தென் மாகாணத்தில் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம், அமளிதுமளிக்கு மத்தியில், தோல்விடையந்துள்ளது.
 
உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட திருத்தம் தொடர்பான அனுமதியை மாகாண சபையில் பெறும் பொருட்டான வாக்கெடுப்பு தென் மாகாண சபையில் இன்று (29) இடம்பெற்றது.
 
குறித்த சட்டமூலத்திற்கு எதிராக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த 27 உறுப்பினர்கள் வாக்களித்ததோடு, ஆதரவாக எவரும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
வாக்களிப்பு இடம்பெற்றபோது, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த சட்டமூலத்தை அவையில் முன்வைக்கப்பட்டபோது, அவையில் அமளிதுமளி நிலையேற்பட்டது.
 
ஐ.தே.க. உறுப்பினர் சந்தன பிரியந்த, செங்கோலை எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளதோடு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதனை பறிக்க முயற்சித்தபோது, செங்கோல் இரண்டு, மூன்று துண்டுகளாக கழன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 

Add new comment

Or log in with...