அர்ஜுன் அலோசியஸ் இன்றும் ஆணைக்குழுவில் ஆஜர் | தினகரன்

அர்ஜுன் அலோசியஸ் இன்றும் ஆணைக்குழுவில் ஆஜர்

 
பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸ் இரண்டாவது நாளாகவும் இன்று (08) ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
 
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய முறி வழங்கலின் போது இடம்பெற்ற மோசடி குறித்தான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ள அவர், இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் (CID) வாக்குமூலம் வழங்குவதற்காக அங்கு ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, சத்தியக்கடதாசி மூலமான உறுதிமொழியுடன் அர்ஜுன் அலோசியஸை எதிர்வரும் திங்கட்கிழமை (11) ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவரது சட்டத்தரணிக்கு அறிவித்துள்ளது.
 

Add new comment

Or log in with...