காசோலை மோசடி வழக்கில் சேரனை கைது செய்ய உத்தரவு | தினகரன்

காசோலை மோசடி வழக்கில் சேரனை கைது செய்ய உத்தரவு

பிரபல இயக்குனர் சேரனை காசோலை மோசடி வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பரமக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் சேரன் மற்றும் அவரது மகள் மீது காசோலை மோசடி வழக்கு ஒன்று பரமக்குடி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையில் இயக்குனர் சேரன் ஆஜராகாததால் அவரை அக்டோபர் 10ஆம் திகதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று பொலிசாருக்கு பரமக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேரனின் சி2எச் நிறுவனத்தின் பரமக்குடி முகவர் பழமுத்துநாதன் என்பவருக்கு சேரன் கொடுத்த ரூ.80 ஆயிரம் காசோலை வங்கிக்கணக்கில் போதிய பணம் இல்லாததால் திரும்பி வந்ததே இந்த வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...