நிந்தவூர் விபத்தில் குடும்பப் பெண் ஸ்தலத்தில் பலி! | தினகரன்

நிந்தவூர் விபத்தில் குடும்பப் பெண் ஸ்தலத்தில் பலி!

 
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூரில் இன்று (07) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நிந்தவூர் அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த சரவணமுத்து ப்ரியா எனும் குடும்பப் பெண் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
 
 
இந்த விபத்து சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது :
 
மண் ஏற்றிக்கொண்டு வந்த சம்மாந்துறையைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான டிப்பர் வாகனமும், கணவன் மற்றும் குழந்தையுடன் குறித்த பெண், பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் இவ்விபத்து சம்பவம் நேர்ந்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மரணமடைந்த பெண்ணின் கணவரும், 05 வயது மதிக்கத்தக்க குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதோடு, விபத்தில் படுகாயமடைந்த குழந்தை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
 
இதேவேளை குறிப்பிட்ட டிப்பர்  வாகனத்தின் சாரதியை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்ததோடு, இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
(நிந்தவூர் குறூப் நிருபர் - சுலைமான் ராபி) 
 

Add new comment

Or log in with...