CID யால் சந்திக்க முடியவில்லை; ஆணைக்குழு அலோசியசிற்கு அழைப்பு | தினகரன்

CID யால் சந்திக்க முடியவில்லை; ஆணைக்குழு அலோசியசிற்கு அழைப்பு

 
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸை  ஆஜராகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
 
குறித்த விடயம் தொடர்பில், விசாரிப்பதற்காக அவரது அலுவலகம் மற்றும் வீட்டிற்கு சென்ற போதிலும் அவரை சந்திக்க முடியவில்லை என குற்றவியல் விசாரணை திணைக்கள (CID) அதிகாரிகள் ஆணைக்குழுவில் தெரிவித்ததை அடுத்து, அவரது வழக்கறிஞர் மூலம் ஆணைக்குழு குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.
 
அத்துடன் அர்ஜுன் அலோசியஸின் கடவுச்சீட்டு இலக்கத்தையும் வழங்குமாறு? அவரது சட்டத்தரணிக்கு இன்று (06) ஆணைக்குழு உத்தரவிட்டது.
 
இதேவேளை, குறித்த முறி தொடர்பிலான முக்கிய விடயங்களை அம்பலப்படுத்திய பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதான முகவரான நுவன் சல்காதுவிற்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட சொலிசிட்ட ஜெனரல் யசந்த கோதகொடவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, அவரது பாதுகாப்பை அதிகரிக்குமாறு, ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
 

Add new comment

Or log in with...