உலகுக்கு முன்னுதாரணமாக இருப்போம்! | தினகரன்

உலகுக்கு முன்னுதாரணமாக இருப்போம்!

'எல்லையில், எதிர்காலத்தில் எந்தப் பிரச்சினைகளும் ஏற்படாமல் இரு தரப்பும் ஒற்றுமையுடன் செயல் படுவோம். ஒற்றுமையுடன், ஒருவரை, ஒருவர் மதித்து நடப்பதால், அண்டை நாடுகளுக்கு இடையே அமைதியான நட்புறவு நிலவும். இதற்கு முன்னுதாரணமாக இருப்போம்' என, சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர், நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளனர்.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப் பிரிக்கா நாடுகள் இணைந்தஇ பிரிக்ஸ் கூட்ட மைப்பின் மாநாடு, சீனாவின் ஜியாமெனில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றார். டோக்லாம் எல்லைப் பிரச்சினையில் இந்தியா - சீனா சமீபத்தில் சுமுகமாக தீர்வு கண்டன. அதன் பிறகு நடக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேற்றுமுன்தினம் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோ சனை நடத்தினார்.

இரு தலைவர்கள் இடையேயான பேச்சு குறித்து, நம் வெளியுறவு செயலர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜெங்க் ஷூவாங்க் ஆகியோர் கூறியதாவது: இந்தியா - சீனா இடையே உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வது குறித்து, இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். ஒரு மணி நேரம் நடந்த இந்த பேச்சின்போது எல்லைப் பகுதியில் மீண்டும் எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் அமைதியுடன் இருப்பதை உறுதி செய்ய இருவரும் தீர்க்கமான முடிவை எடுத்துள்ள னர்.

இது தொடர்பாக இரு தரப்பு பாதுகாப்பு, இராணுவம், வெளியுறவு துறைகளின் அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து, ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்றும் முடிவுசெய்யப்பட்டது.

இந்தியா - சீனா இடையே, நட்புறவுக்காக செய்யப்பட்ட பஞ்சசீல கொள்கை அடிப்படையில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். எல்லையில், அமைதி, இணக்கமான சூழ்நிலை நிலவுவதை இருவரும் உறுதி செய்வோம். சமீபத்தில் நடந்தது போன்ற பிரச்சினை ஏற்படாமல் இருக்க இரு தரப்பும் ஒத்துழைப்போம் என இருவரும் தெரிவித்தனர்.

ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் மதித்து நடப்பதால், அண்டை நாடுகள் இடையே, அமைதியான நட்புறவு நிலவும். இதற்கு முன்னுதாரணமாக இருப் போம் என்று மோடி ,ஜின்பெங் குறிப்பிட்ட னர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நாடுகளின் வளர்ச்சிக்கு 10 உன்னத கடமைகள்

பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே வளர்ந்து வரும் நாடுகளுக்கு இடையேயான சந்தை வாய்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் , பிரிக்ஸ் நாடுகளுடன், சிறப்பு அழைப்பாளர் களான

எகிப்து, தஜிகிஸ்தான், தாய்லாந்து, மெக்சிகோ, கென்யாவைச்சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி பேசியதாவது:

உலக மக்கள் தொகையில், 50 சதவீதம் பேர், பிரிக்ஸ் நாடுகளில் உள்ளனர். நாம் அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால், புதிய உலகத்தை உருவாக்க முடியும். நம் நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டால்,அதன் தாக்கம் மற்ற நாடுகளிலும் இருக்கும் என்ற நோக்கத்துடனே, நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

அதற்கேற்பவே எங்களுடைய திட்டங்கள் உள்ளன.மக்களை அச்சுறுத்தும், பயங்கரவாதம், சைபர் குற்றம் போன்றவற்றை முதலில் திட்டமிட்டு தடுக்க வேண்டும். பேரிடர் நிர்வாகத்திலும் இணைய வேண்டும்.

இதை தவிர, தொழில்திறன் மேம்பாடு, டிஜிட்டல் மயமாக் கம் என, 10 முக்கிய உன்னதமான கடமைகள் நமக்கு உள்ளன. அவற்றை செயல்படுத்தினாலே, நாடுகள் வளர்ச்சியை காணமுடியும். இவ்வாறு மோடி பேசினார்.


Add new comment

Or log in with...