Friday, April 19, 2024
Home » நுகேகொடை பஸ் விபத்தில் பலர் காயம்

நுகேகொடை பஸ் விபத்தில் பலர் காயம்

- பஸ்ஸின்‌ சாரதி மற்றும்‌ நடத்துனர் தப்பியோட்டம்

by Prashahini
October 19, 2023 2:59 pm 0 comment

நுகேகொடை கம்சபா சந்தியில்‌ பஸ்‌ ஒன்றும்,‌ ஜீப்‌ வண்டியொன்றும்‌ மோதியதில்‌ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (19) காலை இடம்பெற்ற இவ்விபத்தில்‌ பலர்‌ காயமடைந்துள்ளதாகத்‌ தெரிவிக்கப்படுகிறது.

ஹோமாகமவில்‌ இருந்து கோட்டை நோக்கி பயணித்த பஸ்‌ ஒன்று மற்றுமொரு பஸ்ஸை முந்திச்‌ செல்ல முற்பட்ட போது முன்னால்‌ வந்த ஜீப்‌ வண்டியுடன்‌ மோதியதில்‌ இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

போக்குவரத்து சமிக்ஞை விளக்கு எரிந்த நிலையில்‌ பஸ்ஸை சாரதி செலுத்தியுள்ளதால்‌ இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸின்‌ சாரதி மற்றும்‌ நடத்துனர்‌ சம்பவ இடத்திலிருந்து தப்பிச்‌ சென்றுள்ளதாகவும் மேலும்‌ தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT