முன்னாள் அமைச்சர் AHM அஸ்வர் காலமானார் | தினகரன்

முன்னாள் அமைச்சர் AHM அஸ்வர் காலமானார்

 

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று (29) காலமானார்.

சகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானார்.

1937.02.08 இல் பிறந்த அவர், மரணிக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும்.

லங்கா சமசமாஜக் கட்சி மூலம் அரசியலுக்குப் பிரவேசித்து அவர், ஐ.தே.க. மூலம் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும், முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சர் மற்றும் பாராளுமன்ற விவகார இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்ததோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.

அவரது இறுதிக் கிரியைகள் நாளை (30) தெஹிவளையில் பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறும் என, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 


There is 1 Comment

"Inna Lillahi wa inna ilayhi Raji un" - May God AllMighty Allah bless him "PARADISE" (Jannathul-Firdoz) with the "Shaafath" of the HOLY PROPHET MOHAMED - SALLALAAHU-WA-ALLAI-WA-SALLAM". Azwer Hajiar was a good friend to all and a humble person, both in Politics and real life. The Muslim Community will miss him a lot, Insha Allah. Noor Nizam - Convener "The Muslim Voice" and former SLFP District Organizer, Trincomalee District and SLFP Stalwart.

Pages

Add new comment

Or log in with...