பேர்பச்சுவல் நிறுவன குரல்பதிவு தொகுதி CID யிடம் | தினகரன்

பேர்பச்சுவல் நிறுவன குரல்பதிவு தொகுதி CID யிடம்

 
பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிதி பரிமாற்ற அறையின் குரல் பதிவு தொகுதி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
 
சர்ச்சைக்குரிய திறைசேரி பிணைமுறி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் குறித்த குரல் பதிவுகள் நேற்று (28) பிற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கையேற்கப்பட்டதாக, ஆணைக்குழு இன்றைய தினம் (29)  அறிவித்திருந்தது.
 
பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேனவிடம் இன்றைய தினம் (29) விசாரணைகள் மேற்கொள்ளபட்டதோடு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவினால் விசேட விண்ணப்பமொன்று முன்வைக்கப்பட்டு, குறித்த குரல் பதிவு தொகுதி மீண்டும் நிறுவப்பட்டுள்ளதாக, அத்தொகுதிக்கு பொறுப்பான நிறுவனம், தங்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
 

Add new comment

Or log in with...