Monday, August 28, 2017 - 16:48
ஒருவர் தெய்வாதீனமாக நீந்திக் கரை சேர்ந்தார்
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (28) பிற்பகல் 2.00 மணியளவில் மண்டை தீவு, சிறுதீவு பகுதி கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
இப்பகுதியில் உள்ள படகு தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகை எடுத்துச் சென்ற 7 மாணவர்களே இவ்வனர்த்தத்திற்கு உள்ளாகினர்.
அவர்களில் ஐவர் நீரில் மூழ்கிய உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் நீந்திக் கரை சேர்ந்துள்ளார். மற்றுமொருவரரைக் காணவில்லை. பின்னர் அவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இதன் போது நீந்திக் கரை சேர்ந்தவர் உட்பட நான்கு பேர் தற்போது பொலிஸரால் கைது செய்யப்பட்டுளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
உயிரிழந்த மாணவர்கள் உரும்பிராய், நல்லூர், சண்டிலிப்பாய், கொக்குவில் பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
யாழ். தொழில்நுட்பக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உட்பட 16 மாணவர்கள், நண்பர் ஒருவரின் பிறந்த நாளை ஒட்டி பொழுதுபோக்கிற்காக கடலுக்கு சென்ற போது இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதே வேளை சுமார் ஐந்து தினங்களுக்கு முன்னர் இத்தீவுக்கு எதிர்ப்பக்கமாகவுள்ள குருசடித்தீவு தேவாலயத்திற்கு, நாவாந்துறையிலிருந்து படகில் சென்ற குடும்பமொன்றும் ஆபத்தில் சிக்கியிருந்ததோடு ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கடற்பகுதி ஆழமற்றதாக இருந்த போதிலும் தற்போதைய காலநிலை காரணமாக விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
There is 1 Comment
Good article
Pages
Add new comment