இந்தியாவிலிருந்து கடத்தப்படவிருந்த 150 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது | தினகரன்

இந்தியாவிலிருந்து கடத்தப்படவிருந்த 150 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது

 
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 150 கிலோ கிராம் கஞ்சா, தமிழக பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
மன்னார் வளைகுடா கடல் வழியாக கள்ளத் தோணி மூலம் இலங்கைக்குள் கேரளா கஞ்சா கடத்தப்பட இருப்பதாக தமிழக சிறப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் உள்ளிட்ட கடலோப் பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட தீவிர  சோதனையின்போது குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
 
அப்போது, தனுஷ்கோடி அருகே கம்பிபாடு கடற்கரைபப்குதியில் நடுக்கடலில் பொதிகள் சில மிதந்துவந்ததை அவதானித்த பொலிஸார் அவற்றைக் கைப்பற்றி சோதனையிட்டனர். கைப்பற்றப்பட்ட பொதிகளில் சுமார் 150 கிலோ கேரளா கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. 
இதனையடுத்து கடலில் மிதந்து வந்த நிலையில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா அடங்கிய பார்சல்கள் தனுஷ்கோடி காவல் நிலையத்தறிகு கொண்டுவரப்பட்டது.
 
இந்த கடத்தலுடன் தொடர்புடைய கடத்தல்காரர்களை தனி படை அமைத்து பொலிஸார் தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் சர்வதேச மதிப்பு பல இலட்சம் ரூபாயாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
 
கடந்த மூன்று தினங்களுக்குள் மன்னார் வளைகுடர் கடல் பிராந்தியங்கள் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார்  2.7 தொன் எடை கொன்ட இரண்டு கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும்  போதை பீடி இலைகள்   பாதுகாப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   
 
24 மணி நேர தீவிர கண்காணிப்பையும் மீறி போதைப் பொருட்கள்  இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவது பாதுகாப்பு வட்டாரங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
(புத்தளம் விஷேட நிருபர் - எம். எஸ். முஸப்பிர்)
 

Add new comment

Or log in with...