ஹஜ்ஜுப் பெருநாள் கருதி A/L பரீட்சையின் இரு பாட தினங்கள் மாற்றம் | தினகரன்

ஹஜ்ஜுப் பெருநாள் கருதி A/L பரீட்சையின் இரு பாட தினங்கள் மாற்றம்

 
எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி இடம்பெறவிருந்த கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் இறுதிப் பாடங்கள் இரண்டும் செப்டம்பர் 04 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளன.
 
அன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாள் என்பதால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
அதனடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் 02 ஆம் திகதி இடம்பெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொதுச் சாதாரண பரீட்சை மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் ii ஆகிய பாடங்கள் செப்டெம்பர் 04 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
 
அதற்கமைய
 
செப்டம்பர் 04 ஆம் திகதி
மு.ப. 8.30 - மு.ப 11.00 : பொது சாதாரணர் பரீட்சை
பி.ப 12.30 - பி.ப. 3.30 : தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் ii 
 
பரீட்சைகள் இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
 

Add new comment

Or log in with...