ஜார்கண்டில் 30 நாட்களில் 52 குழந்தைகள் பலி! | தினகரன்

ஜார்கண்டில் 30 நாட்களில் 52 குழந்தைகள் பலி!

 
ஜார்கண்ட் மாநில அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 52 குழந்தைகள் இறந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் 52 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது. ஆனால் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் இறந்ததாக மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
 
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் 71 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் வெளியான சில நாட்களில், ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரே மாதத்தில் 52 குழந்தைகள் இறந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 

Add new comment

Or log in with...