20 ஆவது திருத்த அபிப்பிராயம்; மேல் மாகாண சபையில் குழப்பநிலை | தினகரன்

20 ஆவது திருத்த அபிப்பிராயம்; மேல் மாகாண சபையில் குழப்பநிலை

 
மேல் மாகாண சபையில் உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான 20 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பான அபிப்பிராயத்தை அறிவதற்கான இன்றைய (28) விசேட அமர்வின்போதே குழப்ப நிலை ஏற்பட்டது.
 
அவை அமர்வின் ஆரம்பத்தில், கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று நடாத்தப்பட வேண்டுமென, முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய விடுத்த வேண்டுகோளுக்கு அமைய சபை நடவடிக்கைகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
 
மீண்டும் சபை கூடிய போது, குறித்த விடயம் தொடர்பில் அடுத்த அமர்வில் கலந்துரையாடலாம் என முதலமைச்சர் சபையில் அறிவித்தார். இதன்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் சில உறுப்பினர்கள் எதிர்ப்பை வௌியிட்டதைத் தொடர்ந்து சபையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
 
இதனையடுத்து, உறுப்பினர்கள் சிலர் சபையிலிருந்து செங்கோலை எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர்.
 
இதன் பின்னர், மேல் மாகாண சபையின் இன்றைய விசேட அமர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
 

Add new comment

Or log in with...