உலக பிரபல நிறுவன தரப்படுத்தலில் HUAWEI 83 ஆவது இடத்தில் | தினகரன்

உலக பிரபல நிறுவன தரப்படுத்தலில் HUAWEI 83 ஆவது இடத்தில்

 
ஜுலை 20 திகதி மாலைப்பொழுதில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆண்டிற்கான Fortune 500 பட்டியலில் கடந்த ஆண்டில் 129 ஆவது ஸ்தானத்திலிருந்த HUAWEI, 83 ஆவது ஸ்தானத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளதுடன், 78.51 பில்லியன் அமெரிக்க டொலர் தொகை வருமானத்துடன் முதற்தடவையாக சர்வதேச ரீதியாக முதல் 100 இடங்களுக்குள் உள்ள நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
 
உலகெங்கிலுமுள்ள பாரிய நிறுவனங்களின் தரப்படுத்தலில் மிகவும் நன்மதிப்புடையதாக கருதப்படுகின்ற Fortune 500 தரப்படுத்தல் பட்டியல், பொதுவாக “இறுதியான தரப்படுத்தல் பட்டியல்” என அறியப்படுவதுடன், Fortune சஞ்சிகையால் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டு வருகின்றது. ஏனைய தரப்படுத்தல்களுடன் ஒப்பிடுகையில், நிறுவனங்களின் பிரமாண்டத்தில் கவனம் செலுத்துவதுடன், அவற்றின் வருமானம் மற்றும் இலாபம் ஆகியவற்றிற்கு ஏற்ப Fortune 500 தரப்படுத்தல் வெளியிடப்பட்டு வருகின்றது. புகழ்பெற்ற நிறுவனங்கள் தமது பலங்கள், பிரமாண்டம் மற்றும் சர்வதேச போட்டித்திறன் ஆகியவற்றை அளவிடுவதற்கு உபயோகிக்கும் ஒரு முக்கியமான குறிகாட்டியாக Fortune 500 தரப்படுத்தல் விளங்குவதுடன், நாடுகள், தேசியம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளுக்கு அப்பால் சர்வதேச பொருளாதாரத்தின் அளவுக்கோலாகவும் காணப்படுகின்றது.
 
மறுபுறத்தில், HUAWEI இன் வர்த்தகநாமப் பெறுமானமானது, ஏனைய பல்வேறு அதிகார முகவர் அமைப்புக்களிடமிருந்தும் உலகளாவிய பல்வேறு புகழ்பெற்ற வர்த்தகநாம பெறுமான பட்டியல்களிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. உதராணத்திற்கு, Forbes சஞ்சிகை 2017 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் பெறுமதிமிக்க வர்த்தகநாமங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரேயொரு சீன நிறுவனமாக HUAWEI திகழ்வதுடன், 2017 ஆம் ஆண்டிற்கான BrandZ முதல் 100 இடங்களிலுள்ள மிகவும் பெறுமதிமிக்க சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் 49 ஆவது ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
 
உலகிலுள்ள மிகவும் பெறுமதிவாய்ந்த வர்த்தகநாமங்கள் பட்டியல் தொடர்பில் Brand Finance வெளியிட்டுள்ள 2017 ஆம் ஆண்டிற்கான சர்வதேசரீதியான முதல் 500 வர்த்தகநாமங்கள் பட்டியலில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 ஸ்தானங்கள் முன்னேறி, 40 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
 
HUAWEI இன் மூன்று வர்த்தகக் குழுமங்களுள் ஒன்றான HUAWEI Consumer Business Group உலகளாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு தனித்துவமான கலாச்சார மற்றும் தொழில்நுட்ப வர்த்தகநாமமாக பிரபலமடைய வேண்டும் என்பதில் தீவிர அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. IDC, SA மற்றும் Trendforce போன்ற பிரபலமான முகவர் நிறுவனங்களின் சந்தை ஆராய்ச்சி புள்ளி விபரங்களின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் முதற்காலாண்டில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சங்கைப் பங்கினைப் பொறுத்தவரையில் HUAWEI மூன்றாம் இடத்திலும், சீனாவில் அது 1 ஆம் இடத்திலும் திகழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அதன் பிரதான உற்பத்தியான P வரிசை மற்றும் Mate வரிசை ஆகியன ஏராளமான வாடிக்கையாளர்களின் அபிமானத்தை வென்றுள்ளதுடன், நடுத்தரம் முதல் உயர் தொழில்நுட்பம் கொண்ட சந்தையில் தனது செல்வாக்கினை அதிகரித்துக் கொள்வதற்கு ஒரு வலுவான அத்திவாரத்தையும் HUAWEI கட்டியெழுப்பி வருகின்றது.
 

Add new comment

Or log in with...