சுகமடைந்த சந்திமால் அணியில் இணைவு | தினகரன்

சுகமடைந்த சந்திமால் அணியில் இணைவு

 
சுற்றுலா இந்திய அணியுடன் இடம்பெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் தினேஸ் சந்திமால் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.
 
வைரஸ் காய்ச்சல் காரணமாக இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை இழந்த தினேஸ் சந்திமால், ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டாவது போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார்.
 
அஞ்சலோ மெத்தியூஸ் இலங்கை அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் தினேஸ் சந்திமால் டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
 
இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் காய்ச்சல் காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
 
இதனால் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத், அணியை வழிநடத்தினார்.
 
அந்த போட்டியில் இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...