ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு (UPDATE) | தினகரன்


ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு (UPDATE)

 
சுகாதார அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த பிரேரணையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
 
இது குறித்தான பிரேரணை தொடர்பில், பாராளுமன்றத்தில் இன்று (24) கையெழுத்து இடும் நடவடிக்கையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு தொடர்பு உள்ளதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் குற்றசம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...