70 பேருடன் சென்ற படகு விபத்து; 25 பேர் மீட்பு; 7 பேரின் சடலம் மீட்பு | தினகரன்

70 பேருடன் சென்ற படகு விபத்து; 25 பேர் மீட்பு; 7 பேரின் சடலம் மீட்பு

 
பிரேசிலில் 70 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்த படகு திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த மீட்புப்படையினர் அதிலிருந்த 25 பேரை உடனடியாக மீட்டுள்ளனர்.
 
 
இவ்விபத்தில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதோடு, ஏனையோர் காணாமல் போயுள்ளனர்.
 
காணாமல் போனோரை தேடும் பணி நடைபெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
படகு விபத்துக்கான காரணம் குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 

Add new comment

Or log in with...