410 போதை மாத்திரைகளை வைத்திருந்த குடும்பஸ்தர் கைது | தினகரன்

410 போதை மாத்திரைகளை வைத்திருந்த குடும்பஸ்தர் கைது

 
திருகோணமலை கிண்ணியா  பகுதியில் நேற்று (23) புதன்கிழமை மாலை  போதை மாத்திரைகளை கொண்டு வந்த ஒருவரை திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
கிண்ணியா மாலிந்துறை  பகுதியியைச் சேர்ந்த 37 வயது குடும்பத்தவரான இவரிடமிருந்து 410 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் தங்களுக்குக் கிடைத்த தகவல் ஒன்றில் பேரிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக போதைப் பொருள்  பொலிஸ் குழுவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ. ஜனேஸன் தெரிவித்தார்.
 
இச்சுற்றிவளைப்பில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரிகளான அத்துக் கோரள (12793), தௌபீக் (53876) மகரூப், (13675) சம்பந் (61836) திருமதி,   இந்திகா ரூபினி (9854) ஆகியோர் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
இவர் திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
(திருமலை மாவட்ட விசேட நிருபர் - அப்துல் பரீத்)
 

Add new comment

Or log in with...