இந்தியாவுக்கு தங்கக் கடத்தல்; இலங்கையர் மூவர் உட்பட நால்வர் கைது | தினகரன்

இந்தியாவுக்கு தங்கக் கடத்தல்; இலங்கையர் மூவர் உட்பட நால்வர் கைது

(வைப்பக படம்)
 
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சி செய்து நால்வர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
நேற்று (20) இரவு கைது செய்யப்பட்ட குறித்த நால்வரில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் எனவும் ஏனைய மூவரும் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 
ரூபா 21 இலட்சத்து 32 ஆயிரத்து 955 பெறுமதியான, 387.81 கிராம் தங்க நகைகளை இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
குறித்த நபர்களுக்கு தலா ரூ 10,000 அபராதம் விதிக்கப்பட்டு அதன் பின் அவர்கள் விடுவிக்கப்படுவர் என சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
 
 

Add new comment

Or log in with...