களனி வழி, சிலாபம் ரயில் போக்குவரத்தில் தாமதம் | தினகரன்


களனி வழி, சிலாபம் ரயில் போக்குவரத்தில் தாமதம்

 
ஹோமாகம மற்றும் கொட்டாவ ரயில் நிலையங்களுக்கிடையில் மாலபல்ல பிரதேசத்தில் ரயில் ஒன்று இயந்திர கோளாறுக்கு பட்டமை காரணமாக களனிவழி பாதையில் புகையிரதம் ஒன்றும், சிலாபம் ரயில் பாதையில் ரயில் ஒன்று மாடு உடன் மோதியதன் காரணமாக அப்பாதையிலும் புகையிரத போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. 
 
களனி வழி பாதையில் ஏற்பட்ட புகையிரத போக்குவரத்து ஸ்தம்பிதம் காரணமாக இன்று (21) கொழும்பு - கோட்டை வரையான புகையிரத சேவைகள் இரண்டு தாமதம் அடைந்ததாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
 
குறித்த இரு ரயில் போக்குவரத்து சேவைகளையும் வழமைக்கு திருப்புவதற்கான ஏற்பாடுகளை புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் மேற்கொண்டுள்ளது.
 

Add new comment

Or log in with...