துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம்; மீண்டும் அ.இ.அ.தி.மு.க வில் | தினகரன்

துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம்; மீண்டும் அ.இ.அ.தி.மு.க வில்

துணை முதல்வரானார் ஓ.பி.எஸ்: தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவருக்கு நிதி மற்றும்  வீட்டு வசதித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

ஆளுநர் மாளிகை: ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்தியப் பிறகு பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகியோர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளனர். அங்கு பன்னீர்செல்வம் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

ஆளுநர் மாளிகை

மீண்டும் ஜெயலலிதா சமாதி: இரு அணிகள் இணைந்தப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள், மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்றனர். அங்கு ஜெயலலிதா சமாதிக்கு இருவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.மேலும், ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து அவரது படத்துக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல, எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சமாதியிலும் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

ஜெயலலிதா சமாதி

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.  அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவையில் பன்னீர்செல்வத்துக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். 

பழனிசாமி - பன்னீர்செல்வம் சந்திப்பு : ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பிரிந்த அணிகள் தற்போது இணைந்தன. எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கைக்குலுக்கினர். அணிகள் இணைந்ததை அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். (வி)

 

Add new comment

Or log in with...