பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரயன் ஆஜராகி விளக்கமறியலில் | தினகரன்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரயன் ஆஜராகி விளக்கமறியலில்

 
மருத்துவ பீட மாணவர்கள் சங்கத்தின் அழைப்பாளர் ரயன் ஜயலத்திற்கு எதிர்வரும் ஓகஸ்ட் 23 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
 
அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காமை காரணமாக அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (18) முற்பகல் தனது வழக்கறிஞருடன் மாளிகாகந்த நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 
குறித்த வழக்கு தொடர்பில் அவர் உள்ளிட்ட 5 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...