2 கிலோ தங்கத்தை கடத்த உதவிய புலனாய்வு அதிகாரி கைது | தினகரன்

2 கிலோ தங்கத்தை கடத்த உதவிய புலனாய்வு அதிகாரி கைது

(வைப்பக படம்)
 
ரூபா 91 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடத்துவதற்கு உதவிய புலனாய்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சிங்கப்பூரில் இருந்து பயணி ஒருவரால் கொண்டுவரப்பட்ட குறித்த தங்க நகைகளை, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடத்திச் செல்வ முயற்சித்த குறித்த சந்தேகநபரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
 
குறித்த நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணி புரியும் அரச புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் என சுங்கம் அறிவித்துள்ளது.
 
சந்தேகநபரிடமிருந்து, ரூபா 9,146,385 பெறுமதியான சுமார் 2 கிலோ தங்க நகைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...