ரவியின் வெளி விவகாரம் திலக் மாரப்பனவுக்கு | தினகரன்

ரவியின் வெளி விவகாரம் திலக் மாரப்பனவுக்கு

 
ரவி கருணாநாயக்க பதவி விலகியதை அடுத்து, வெற்றிடமான வெளி விவகார அமைச்சு பதவி, திலக் மாரப்பனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
சற்று முன்னர் (15) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
 
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியில் பாராளுமன்ற உறுப்பினரான திலக் மாரப்பன, ஏற்கனவே அபிவிருத்தி பணிகள் தொடர்பான அமைச்சராக பதவி வகிக்கின்றார் என்பதோடு, அவர் ஜனாதிபதி சட்டத்தரணியுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவர், இதற்கு முன்னர் தற்போதைய அரசில், (04 செப்டெம்பர் 2015 - 09 நவம்பர் 2015) சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்து, பின்னர் பதவி விலகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...