Home » நோயாளி ஓவியம் வரையும் வேளையில் மூளைக்குள் இடம்பெற்ற சத்திரசிகிச்சை!

நோயாளி ஓவியம் வரையும் வேளையில் மூளைக்குள் இடம்பெற்ற சத்திரசிகிச்சை!

அநுராதபுரம் வைத்தியசாலை மருத்துவநிபுணர்களுக்கு குவியும் பாராட்டு!

by mahesh
October 18, 2023 9:26 am 0 comment

நோயாளி ஒருவரை குறைந்தபட்ச மயக்கநிலையில் வைத்தவாறு, அவரது மூளையின் இடது பக்கத்தில் உள்ள கட்டியை அனுராதபுரம் போதனா வைத்தியசாலை நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவின் வைத்தியர் குழுவினர் நேற்றுமுன்தினம் (16) வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சிற்பக் கலைஞரான சமன் ஜயசிங்க என்ற இந்த நோயாளி சத்திரசிகிச்சை இடம்பெற்ற வேளை ஓவியம் வரைந்துள்ளார்.

பேச்சு மற்றும் உணர்வுகளை கட்டுப்படுத்தும் அவரது மூளையில் ஒரு பகுதியை தவிர்ப்பதற்காக அவரை ஓவியம் வரையுமாறு வைத்தியர்கள் கேட்டுள்ளனர். இந்நாட்டு அரச மருத்துவமனையில் முதன் முதலில் இவ்வாறான சத்திரசிகிச்சையை 2020 ஆம் ஆண்டு குறித்த மருத்துவக் குழுவினர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மேற்கொண்டனர்.

அதே குழுவினர் இவ்வாறான மூன்றாவது சத்திரசிகிச்சையை தப்போது மேற்கொண்டுள்ளனர்.நோயாளி சுயநினைவுடன் ஓவியம் வரைந்து கொண்டிருக்கையில் அவரது மூளைக்கட்டியை பிரித்தெடுக்கும் சத்திரசிகிச்சை மிகவும் அபூர்வமானதாகும்.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவு வைத்தியர்கள் மேற்கொண்ட இச்சத்திரசிகிச்சையை பலரும் பாராட்டியுள்ளனர்.

(அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT