Thursday, April 25, 2024
Home » இரத்தினபுரி மாவட்டத்தில் 16 பிரிவுகளில் மண்சரிவு அபாய நிலை அறிவிப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் 16 பிரிவுகளில் மண்சரிவு அபாய நிலை அறிவிப்பு

by mahesh
October 18, 2023 8:10 am 0 comment

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 18 பிரதேச செயலகப் பிரிவுகளில் 16 பிரிவுகளில் மண் சரிவு அபாய நிலைமை இருப்பதாக தேசிய கட்டட பரிசோதனை நிலையம் அறிவித்துள்ளது. இந்த அறிவுறுத்தல் மீண்டும் அறிவுரை வழங்கும் வரை அமுலில் இருக்கும் என இரத்தினபுரி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இரத்தினபுரி-எலபாத-குருவிட- எஹலியகொடை- மற்றும் கலவான பிரதேச செயலகப் பிரிவுகளில் மண்சரிவு அபாய நிலைமை உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாய நிலைமை இருப்பதாக இந்தப் பிரதேச செயலக பிரிவுகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் மண் சரிவு அவதானம் உள்ள பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு நிவிதிகல-ஓப்பனாயக்க-வெலிகேபொல-பலாங்கொடை-இம்புல்பே-அயகம-கஹவத்த-பெல்மதுளை-கிரியெல்ல-கொடகவெல-கொலன்ன ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு எச்சரிக்கை அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

( பலாங்கொடை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT