பருத்தித்துறை கடற்பரப்பில் 4 தமிழக மீனவர்கள் கைது | தினகரன்

பருத்தித்துறை கடற்பரப்பில் 4 தமிழக மீனவர்கள் கைது

 
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
குறித்த மீனவர்கள் பருத்தித்துறையிலிருந்து 18 கடல்மைல் தொலைவில் நேற்று (13)  இரவு  கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
 
அத்துடன், குறித்த மீனவர்கள் மீன்பிடிக்காக  பயன்படுத்திய படகொன்று உட்பட ஏனைய மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி மீன்பிடித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
 
(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
 
 

Add new comment

Or log in with...