சுமத்திராவில் பூமி அதிர்ச்சி; சுனாமி அனர்த்தம் இல்லை (UPDATE) | தினகரன்

சுமத்திராவில் பூமி அதிர்ச்சி; சுனாமி அனர்த்தம் இல்லை (UPDATE)

 
இந்துனேஷியாவின் மேற்கு பகுதியிலுள்ள சுமத்திரா தீவுகளுக்கு அருகில் 6.5 மக்னிடியூட் அளவிலான பூமியதிர்ச்சி உணரப்பட்டுள்ளது.
 
இன்று (13) முற்பகல் இந்துனேஷிய நேரப்படி10.08 மணிக்கு இடம்பெற்ற இப்பூமியதிர்ச்சி சிங்கப்பூரிலும் (மு.ப. 11.08) உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (இலங்கை நேரப்படி முற்பகல் 8.38) 
 
கடலுக்குள் 35 கிலோ மீற்றர் ஆழத்தில் குறித்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளதோடு, அது தொடர்பிலான சேத விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
 
குறித்த பூமியதிர்ச்சி தொடர்பில் எவ்வித் சுனாமி அனர்த்தங்களும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
 
இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், கரையோர பகுதியில் வாழ்வோரை எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும், அவ்வெச்சரிக்கையை மீளப் பெற்றுள்ளது.
 

Add new comment

Or log in with...