பொத்துவிலில் பிரம்மாண்டமான பள்ளிவாசல் திறந்து வைப்பு | தினகரன்

பொத்துவிலில் பிரம்மாண்டமான பள்ளிவாசல் திறந்து வைப்பு

 
பொத்துவிலில் மிக பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட பெரியபள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வு இன்று (11) ஜும்மா தொழுகையுடன் இடம்பெற்றது.
 
இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர் றிஷாத் பதியுத்தீன், விஜித விஜயமுனி சொய்ஸா, இராஜாங்க அமைச்சர் பெளசி, பிரதியமைச்சர்களான பைஷால் காசீம், எச்.எம்.எம், ஹரீஸ், அமீர் அலி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், உள்ளிட்டவர்களுடன் பல அரசியல் பிரமுகர்களும், மார்க்க அறிஞர்களும், முக்கியஸ்தர்களும் அதிகமான பொதுமக்களும் இதன்போது கலந்துகொண்டனர்.
 
 
மர்ஹூம் சதக்கத் ஹாஜியார் என்னும் பிரபல மாணிக்க வர்த்தகரினதும் அவரது பிள்ளைகளினதும் முழு முயற்சி மற்றும் தனிப்பட்ட நிதிகள் மூலமே இப்பள்ளிவாசல் அழகுற நிர்மாணிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 
 
 
 
(சப்னி அஹமட்)
 

Add new comment

Or log in with...