உலக தடகள பதக்க பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் ஆதிக்கம் | தினகரன்

உலக தடகள பதக்க பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் ஆதிக்கம்

டியானா பார்டலெட்டா, பிரிட்னி ரீஸ்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.

நேற்று இடம்பெற்ற நீளம் பாயும் போட்டியில் அமெரிக்க வீராங்கனை பிரிட்னி ரீஸ் தங்கப்பதக்கம் வென்றார். அப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை டியானா பார்டலெட்டா வெண்கல பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் 7.02 மீட்டர் தூரம் தாண்டியே குறித்த தங்கத்தை வென்றுள்ளார்.

இதேநேரம், பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டிபிள் சேஸ் ஓட்டத்தில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தியது.

அந்த வகையில் அமெரிக்கா 8 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் உள்ளடங்களாக மொத்தமாக 23 பதங்கங்களை பெற்றுள்ளது.

2 ஆம் இடத்தில் உள்ள கென்யா, 3 தங்கம் 1 வெள்ளி மற்றும் 4 வெண்கல பக்கங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 8 பதக்கங்களை பெற்றுள்ளது.

இதனிடையே, தலா 2 தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் அடங்களாக மொத்தமாக 6 பதக்கங்களை பெற்று போலந்து 3ஆம் இடத்தில் உள்ளது.

 


Add new comment

Or log in with...