அத்திட்டிய வங்கி கொள்ளையிடப்பட்ட பணம் 34 இலட்சம் ரூபா | தினகரன்

அத்திட்டிய வங்கி கொள்ளையிடப்பட்ட பணம் 34 இலட்சம் ரூபா

 
அத்திட்டிய பகுதியிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் நேற்று (10) இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ரூபா 34 இலட்சத்து 36 ஆயிரத்து 200 (ரூபா 3,436,200) கொள்ளையிடப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
 
முழு முகமும் மூடப்பட்ட தலைக்கவசங்களை அணிந்து வந்த சந்தேகநபர்களால் இவ்வாறு பணம் கொள்ளையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த சம்பவத்தில் சந்தேகநபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வங்கியின் பாதுகாவலர் இருவர் காயமடைந்ததோடு, அதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
குறித்த சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிசாரினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
 

Add new comment

Or log in with...