இலங்கை--இந்திய 3 ஆவது டெஸ்ட் பல்லேகலவில் இன்று ஆரம்பம் | தினகரன்

இலங்கை--இந்திய 3 ஆவது டெஸ்ட் பல்லேகலவில் இன்று ஆரம்பம்

இலங்கை- - இந்திய அணிகள் மோதும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று 12ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை டென் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

பல்லேகலயில் 3-வது டெஸ்டிற்கான இலங்கை அணியில் துஷ்மந்த சமீர, லஹிரு கமகே சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா -- இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்வடைந்துள்ள இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் இருக்கிறது.

3-வது மற்றும் கடைசி போட்டி சனிக்கிழமை பல்லேகலயில் தொடங்குகிறது. இலங்கை அணியில் ஹேரத், பிரதீப் காயம் ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் 3-வது போட்டியில் இருந்து ஹேரத், பிரதீப் மற்றும் குணதிலக ஆகியோர் நீக்கப்பட்டு துஷ்மந்த சமீர, லஹிரு கமகே ஆகியோர் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு சகலதுறைவீரர் ஜடேஜாவிற்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக அக்சார் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணியுடன் கொழும்பில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் 2ஆவது இன்னிங்ஸிற்காக இலங்கை துடுப்பெடுத்தாடிய போது போட்டியின் 58 ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் தான் வீசிய பந்துக்கு களத்தடுப்பில் ஈடுபட்ட ஜடேஜா, தனது கோட்டுக்குள் இருந்து வெளியேறாமல் இருந்த இலங்கை துடுப்பாட்ட வீரரின் திசையை நோக்கி பந்தை திரும்ப வீசினார். அந்தப் பந்து மலிந்த புஷ்பகுமாரவைத் தாக்குவது நூலிழையில் தப்பியது.

ஜடேஜா பந்தை ஆபத்தான முறையில் எறிந்ததாக கள நடுவர்கள் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து ஐ.சி.சி போட்டி மத்தியஸ்தர் ரிச்சி ரிச்சட்சன் முன்வைத்த முறைப்பாட்டின்படி தன் மீதான குற்றச்சாட்டை ஜடேஜா ஏற்றதை அடுத்து அவருக்கு ஒரு போட்டித்தடையும், போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீத அபாரதமும் விதிக்கப்பட்டது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் காலியில் நடந்த முதல் டெஸ்டில் 304 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், கொழும்பில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்தது.

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பல்லேகலயில் இன்று சனிக்கிழமை தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் வென்று இந்திய அணி ‘ஹெட்ரிக்’ சாதனை புரியுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.

‘இடைநிறுத்தம்’ காரணமாக ஜடேஜா ஆட முடியாதது பாதிப்பே. ஏனென்றால் அவர் 13 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அவர் இடத்தில் அக்‌ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். அக்‌ஷர் பட்டேல் முதல் முறையாக டெஸ்டில் ஆடுவாரா? அல்லது குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுழற்பந்து வீச்சில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக அஸ்வின் இருக்கிறார். அவர் 11 விக்கெட் எடுத்துள்ளார். முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் வேகப்பந்தில் முத்திரை பதிக்கக் கூடியவர்கள். அந்த அணியின் பேட்டிங்கில் கருணாரத்ன (265 ஓட்டங்கள் ), குஷால் மெண்டீஸ் (212) ஆகியோரும் பந்து வீச்சில் பிரதீப்பும் நல்ல நிலையில் உள்ளனர்.

இரு அணிகளும் மோதிய 40 போட்டியில் இந்தியா 18 டெஸ்டிலும், இலங்கை 7 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 15 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

இரு அணி வீரர்கள் விவரம்:-

இந்தியா: விராட் கோலி (தலைவர்), லோகேஷ் ராகுல், தவான், புஜாரா, ரகானே, ஹர்த்திக் பாண்டியா, விருத்திமான் சகா, அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், புவனேஷ்குமார், அபினவ் முகுந்த், ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா.

இலங்கை: சந்திமால் (தலைவர்), உபுல் தரங்க, கருணாரத்ன, மெண்டிஸ், மெத்யூஸ், திக்வெல்லா, தில்ருவன் பெரேரா, பிரதீப், குஷால் பெரேரா, குணரத்ன, திரிமான்னே, தனஞ்சய டிசில்வா, லகிரு குமார, விஷ்வா பெர்னாண்டோ, நுவன் பிரதீப், புஷ்பக்குமார, சண்டகன், சமீர, லஹிரு கமகே.

இதனால், கடந்த 2 ஆண்டுகளில் 6 தரமதிப்பிழப்பு புள்ளிகளை பெற்ற அவருக்கு, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே ஜடேஜாவுக்குப் பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேலை 15 பேர் கொண்ட இந்திய அணிக்குள் இணைத்துக்கொள்ள அந்நாட்டு தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி இலங்கை அணியுடனான அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த சைனமன் பந்துவீச்சாளரான அக்சார் பட்டேல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...