அமெரிக்க தலைநகருக்கு மேல் பறந்த ரஷ்ய உளவு விமானம் | தினகரன்

அமெரிக்க தலைநகருக்கு மேல் பறந்த ரஷ்ய உளவு விமானம்

ரஷ்யாவின் உளவு விமானம் ஒன்று அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் மற்றும் தலைநகர் வொஷிங்டன் டிசியில் உள்ள பல அரச கட்டடங்களுக்கு மேலால் தாழ்வாக பறந்து சென்றுள்ளது.

ரஷ்ய விமானப்படையின் டுபொலெவ் டு–154 விமானம் கடந்த புதன்கிழமை அமெரிக்க பாராளுமன்ற கட்டடம், அன்ட்ரூஸ் இராணுவத்தளம், சி.ஐ.ஏ கட்டடம், கேம்ப் டேவிட் மற்றும் இரகசிய அரச நிலவறை ஒன்றுக்கு மேலால் பறந்ததாக சி.என்.என் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் 1992 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட திறந்த வான்பகுதிகள் தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ் ரஷ்ய உளவு விமானங்கள் இவ்வாறு பறப்பதற்கு அனுமதி உள்ளது. ரஷ்யா, அமெரிக்கா மற்றும் மேலும் 32 நாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தத்தின்படி அடுத்த நாடுகளில் வான் கண்காணிப்பில் ஈடுபட சட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 3,700 அடி தாழ்வாக பறந்திருக்கும் ரஷ்ய விமானத்தால் புகைப்படங்கள் எடுக்கவும், வெப்பத்தின் அளவை கணிக்கவும், உளவு சமிக்ஞைகளை பெறவும் கூட முடியுமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான விரிசல் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த விமானம் பறந்துள்ளது. 


Add new comment

Or log in with...