அருகாமை நட்சத்திரத்தில் பூமியின் அளவு கிரகங்கள் | தினகரன்

அருகாமை நட்சத்திரத்தில் பூமியின் அளவு கிரகங்கள்

சூரியனை ஒத்த அருகாமை நட்சத்திரத்தில் உயிர்வாழ சாத்தியம் கொண்ட இரு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சூரியனில் இருந்து 12 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் ‘டவு செடி’ என்று அழைக்கப்படும் நட்சத்தில் பூமியின் அளவு கொண்ட நான்கு உலகங்கள் இருப்பதை சர்வதேச ஆய்வுக் குழு ஒன்று அவதானித்துள்ளது. இந்த நட்சத்திரம் வெறுங்கண்ணால் பார்க்கமுடியுமான நெருக்கத்தில் உள்ளது.

இதில் உள்ள இரு கிரகங்கள் தனது நட்சத்திரத்தில் உயிர்வாழ சாத்தியம் கொண்ட இடத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவைகளில் திரவ நீர் இருக்க சாத்தியம் உள்ளதாகவும் நம்புகின்றனர்.

டவு செடி நட்சத்திரம் அளவு மற்றும் பிரகாசம் இரண்டும் எமது சூரியனை ஒத்திருப்பதோடு சூரியனைப் போன்று பல கிரக அமைப்பையும் கொண்டுள்ளது.

இங்குள்ள இரு கிரகங்களும் பாறை உலகங்களாக இருப்பதை காட்டுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் அந்த நட்சத்திரத்தை சுற்றி பாரிய தூசு படலம் இருப்பது அந்த கிரகங்கள் மீது விண்கற்கள் விழும் சாத்தியமானது, அவைகளில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்பை குறைப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். 


Add new comment

Or log in with...