17ஆவது LSR கொழும்பு மரதன் போட்டி | தினகரன்

17ஆவது LSR கொழும்பு மரதன் போட்டி

17 ஆவது LSR கொழும்பு மரதன் போட்டி அக்டோபர் மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சின் நாட்காட்டியில் முக்கியமானதொரு விளையாட்டு நிகழ்வாக அமைந்துள்ளது. இந்நிகழ்வு இலங்கையின் வர்த்தகத் தலைநகரான கொழும்பில் ஆரம்பிது வைக்கபடும் என எல்.எஸ்.ஆர் அமைப்பின் தலைவர் திலக்வீரசிங்க தெரிவித்தார்.இப்போட்டி தொடர்பாக செய்தியாளர் மாநாடு அண்மையில் கொழும்பு ஒலிம்பிக் கவுஸில் இடம்பெற்றது.

அவர் தொடந்து கருத்து தெரிவிக்கையில்:

இதனை ஒழுங்கு செய்துள்ள Lanka Sportreizen இம்முறை வெவ்வேறுபட்ட பிரிவுகளில் அண்ணளாவாக 10,000 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குகொள்வர் என எதிர்பார்க்கின்றோம். இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமையும். இந்நிகழ்வினை நடத்தவதற்கான மொத்த செலவு அண்ணளவாக 24.2 மில்லயன் ரூபாவாகும். இத்தொகையில் சுமார் 2.5 மில்லியன் ரூபாய் வெவ்வேறு நிகழ்வுகளில் வெற்றிபெற்றோரிடையே பகிர்ந்தளிக்கப்படும்.

இலங்கையை பொழுதுபோக்கு கேந்திர நிலையமாக மாற்றும் நோக்குடன் செயற்பட்டு வரும் Lanka Sportreizen ஆனது நீர் மற்றும் தண்ணீர் விளையாட்டுக்கள் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுக்களை ஒழுங்குசெய்வதில் நாட்டில் முன்னணி வகிக்கின்றது. இந்நிறுவனமாது தனித்துவமான நிகழ்வுகளை ஒழுங்குசெய்வதில் கறைபடியாத மூன்று தசாப்தகால வரலாற்றினைக் கொண்டிருக்கின்றது.

அவ்வாறு ஆரம்பித்து வைத்த நிகழ்வுகளில்: 'இலங்கை தேனீர்க் கோப்பை'- வீதிச் சைக்கிள் ஓட்டப் போட்டி, 'ரம்பிள் இன் த ஜங்கிள்' – மலையில் இடம்பெறும் சைக்கிள் சவால், 'விட்டல் அமேசன்' சாதனைச் சவால், ' WOS அவுஸ்திரேலிய தொழில்சார் சேர்ஃபிங் நிபுணர்களுடனான சேர்ஃபிங், 'ஸ்ரீலங்கன் கொல்வ்ப் கிளசிக்' மற்றும் ஏனையவைகள்

இந்த இலக்குடனேயே 1998 ஆம் ஆண்டில் LSR சர்வதேச மரதனானது காலியில் அறிமுப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வானது கடந்த 16 பதிப்புகளில் படிப்படியாக முன்னேற்றம் கண்டு, தற்போது ஆசியாவின் விளையாட்டு நிகழ்வுகளுக்கான நாட்காட்டியில் பிரதான விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகவுள்ளது. IAAF இல் தொலைதூர ஓட்டப்போட்டிகளுக்கான ஆளுகைக் குழுவும், AIMS World Congress இல் உலகில் 420 போட்டிகளை நடாத்தும் 110 நாடுகளில் 56 வாக்குரிமைகொண்ட அங்கத்தவர்களின் 54 ஆவது இடத்தில் உள்ளதுமான தொலைதூர ஓட்டப் போட்டிகள் மற்றும் சர்வதேச மரதன் சங்கத்தில் (AIMS)பதிவுசெய்துள்ள சர்வதேச மரதன் நிகழ்வு இது மாத்திரமேயாகும்.

இந்நிகழ்வின் 16 ஆவது போட்டியானது 44 நாடுகளைச் சேர்ந்த 7500 ஓட்டப்போட்டியாளர்களுடன், உலகின் அனைத்துக் கண்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும். அவர்களில் 250 க்கும் மேற்பட் வெளிநாட்டுப் போட்டியாளர்கள் அடங்கலாக 2016 அக்டோபர் மாதம் 2 ஆம் திகதியன்று நிறைவடைந்தது. இதன் பரிசளிப்பு நிகழ்வானது SLT Silk Sports Awards 2016 நிகழ்வில் 'Sports Brand of the Year' விருது வழங்கிக் கௌரவிக்கபட்டது. இது இலங்கையின் முதலாவது வருடாந்த விளையாட்டு விருதுவழங்கும் நிகழ்வாக அமைந்தது

கடந்த காலத்தில், இந்நிகழ்வானது கொழும்பில் இருந்து நீர்கொழும்புவரை நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கொழும்பு நகரின் அபிவிருத்தியை அடுத்து 5 கிமீ மற்றும் 10 கிமீற்றர் தூரம் கொண்ட வேடிக்கை ஓட்டப்போட்டிகள், கொழும்பு நகர எல்லைக்குள் வட்டவழித்தடத்தில் அமையவிருக்கின்றது. இது கொழும்பு நகரின் அழகினை காட்சிப்படுத்துவதற்கான எண்ணக்கருவினைக்கொண்டது. என அவர் மேலும் தெவித்தார்.

இந்நிகழ்வில் வியைட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர,ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுரேன் ரத்வத்தை,மேல் மாகாண முதலமைச்சர் இருறு தேவப்பிரிய ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்நிகழ்வின் பிரதான

குறிக்கோள்கள்

• பாதுகாப்பான சுற்றுலாத் தலமாக இலங்கையின் பிம்பத்தினை மேலும் மேம்படுத்தவும், இங்கு மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதால் இது உல்லாசப் பயணிகளுக்குப் பாதுகாப்பான நாடு என்பதனை மேலும் பிரபலப்படுத்துவதும்.

• களியாட்ட நிகழ்வுகளுக்குப் பொருத்தமான இடமாக இலங்கையினை ஊக்குவித்தல்

• இந்நாட்டின் இளைஞர் மற்றும் பாடசாலை சிறார்களிடையே இவ்வாறான நிகழ்வுகளில் பங்கேற்கும் பழக்கவழக்கத்தினை ஊக்குவித்தல்.

• சர்வதேச போட்டியாளர்களுடன் இணைந்து ஓடுவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குவதன் மூலம், இலங்கையர்களிடயே புதைந்துள்ள ஆற்றல்களை வெளிக்கொணர்தல்

• இலங்கைச் சமூகங்களிடையே 'வேடிக்கை ஓட்டப்போட்டி' களை அறிமுகப்படுத்தி அதன் மூலம்,- 'ஆரோக்கியமன சமூகம்' எனும் எண்ணக்கருவினை வளர்த்தல்.

 பரீத் ஏ .றகுமான் 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...