பொலிசார் மீதான வாள்வெட்டு: இது வரை 9 பேர் கைது | தினகரன்


பொலிசார் மீதான வாள்வெட்டு: இது வரை 9 பேர் கைது

 
யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ்நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகள் மீதான வாள் வெட்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
குறித்த இருவரும் மோட்டார்சைக்கிள்களுடன் நேற்றைய தின் (10) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
 
சந்தேகநபர்கள், வல்வெட்டிதுறை, கொக்குவில் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், நேற்றைய தினம் (10) இவர்கள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி வரை அவர்களுக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஜூலை 30 ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வைத்து இரு பொலிசார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு, குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் 7 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களுக்கும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...