ஐ.எஸ் படுகொலை சம்பவம்: மேலும் 27 பேருக்கு தூக்கு | தினகரன்

ஐ.எஸ் படுகொலை சம்பவம்: மேலும் 27 பேருக்கு தூக்கு

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவால் 1,700 ஈராக்கிய படையினர் கொல்லப்பட்ட படுகொலை சம்பவத்துடன் தொடர்புபட்டு 27 பேருக்கு ஈராக் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட 25 பேர் போதிய ஆதாரமில்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஓர் ஆண்டுக்கு முன் இதே குற்றச்சாட்டில் 36 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

டிக்ரித் நகருக்கு அருகில் உள்ள இராணுவ முகாமில் வைத்து இடம்பெற்ற இந்த படுகொலையை ஐ.எஸ் வீடியோ எடுத்து வெளியிட்டது அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்து.

கொல்லப்பட்டவர்களில் அதிகமானோர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஷியா இளைஞர்களாவர்.

தம்மிடம் பிடிப்பட்ட படையினரை வரிசையில் நிற்கவைத்து சுட்டுக் கொல்லும் புகைப்படங்களை ஐ.எஸ் வெளியிட்டிருந்தது. 


Add new comment

Or log in with...